பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் வேண்டுகேளின் பேரில் மன்னாரில் பாடசாலை! றிப்ஹான் திறந்து வைப்பு

(றஹீம் மன்னார்)

ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியுடன் UN HABITED நிறுவனத்தின் அனுசரணையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேண்டுகோளின் பேரில் முசலி பிரதேசத்தில் உள்ள புதுவெளி,கொண்டச்சி ஆகிய பாடசாலைகளில் நிர்மானிக்கப்பட்ட புுுதிய கட்ட திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு அமைச்சரின் பிரதிநிதியாகவும் சிறப்பு விருந்தினராகவும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் இதன்போது நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் ” உண்மையில் நாங்கள் இந்த கட்டிடங்கள் வர காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி கூற வேண்டும் நம் அனைவருக்கும் தெரியும் ஜப்பான் நாடு என்பது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அந்த நாடு உலக வரைபடத்திலிருந்தே அகற்றப்படும் அளவிற்கு அழிவினை எதிர்நோக்கி இன்று உலக நாடுகளை தொழில்நுட்பத்தின்மூலம் திரும்பி பார்க்க வைத்த நாடு
இந்த கட்டடத்தில் இதற்காக நிதியினை வழங்கிய ஒவ்வொரு மக்களின் உழைப்பும் அவர்களுடைய பெயரும் இருக்கின்றது அதுமட்டுமல்லாது இவ்வாறான அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலைகள் COLOMBO மற்றும் கல்லூரிகளை தவிர வேறு எங்கும் கிடையாது பெரும்பான்மை தேசிய பாடசாலைகளில் கூட இவ்வாறான வசதிகள் கிடையாது ஆனால் எமக்கு நம் சிறுபான்மையினருக்கு அமைச்சர் மூலமாக இவ்வாறான அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றது இதற்கு நாம் முதலில் இறைவனுக்கும் பின் அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் இன்று எமது முஸ்லீம்கள் ஒவ்வொரு நாட்டிலும்
பாரிய கொடுமைகளை எதிர்கொண்டு தம் உயிர் உறவு போன்ற அனைத்தையும் இழந்து அகதியாக வாழ்கின்றனர் ஆனால் இன்று அமைச்சர் இந்த இனவாதிகளுடன் நம் முஸ்லீம் சமூகத்திற்காக நேரடியாக துணிச்சலுடன் மோதுகின்றார்.

 

காரணம் நமது சமூகம் மீண்டும் ஒரு அகதி வாழ்க்கையினை வாழாது சிறந்த கல்வி அறிவுடைய சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் எனவே மாணவர்களாகிய நீங்கள் தியாகத்துடன் கல்வியை கற்க வேண்டும் அதுமட்டுமல்ல இது உங்கள் பாடசாலை இதன் வளர்ச்சியில் முழு பங்கினையும் நீங்கள் வழங்க வேண்டும் நீங்கள் படிக்கும் காலங்களில் ஒரு டோபியுடைய பணம் ஒரு ஐந்து ரூபாவினை பாடசாலைக்கென தினந்தோறும் சேமித்து வாருங்கள் சிறு சேமிப்பு நாளை பாரிய ஒரு அபிவிருத்திக்கு வழி வகுக்கும் எனவே மாணவர்களாகிய நீங்கள் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும்.பெற்றோர்கள் இவர்களுடைய கல்வியில் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் காரணம் நான் இன்று ஒரு அரசியல்வாதியாக இருக்கின்றேன் நாளை என்னவென்பதை சொல்ல முடியாது ஆனால் படித்தவர்கள் என்றும் படித்தவர்களாகவே இருப்பார்கள் ஒரு வைத்தியராகவோ அல்லது ஆசிரியராகவோ சிறந்த பதவியில் தன் ஆயுள் முடியும் வரை இருப்பார்கள் எனவே மாணவர்கள் கற்றலில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் உங்கள் கல்வி வளர்ச்சிக்கு எந்நாளும் அமைச்சராலும் இயன்ற உதவிகளை செய்வோம் ” என தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்விற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் பாடசாலை ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

மொட்டுக்கட்சியில் சில தகுதியில்லாத வேட்பாளர்கள்

wpengine

தனிமையில் இருந்த குறித்த யுவதி தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்

wpengine

பெரும்பான்மையினச் சமூகம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்வதாகக்கூறும் தவறையே

wpengine