அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் சிலர் சட்டவிரோதமான முறையில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் அரசாங்கத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடல் ஆகியன தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றங்களில் அரசியல்வாதிகள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் இது பற்றிய தகவல்களை வார இறுதி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரவையை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய அமைச்சர்கள் சிலருக்கு எதிராக ஏற்கனவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது நல்லாட்சியை தலைகீழாக மாற்றும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும் என சிவில் அமைப்புக்களின் பிரதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கு முன்னர் அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்புரிமை கூட மேன்முறையீட்டு நீதிமன்றினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் தொடர்பில் சிவில் அமைப்புக்கள் இரசியமான முறையில் கண்காணிப்பு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.