உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி மீது கடும் கோபத்தில் போப் பிரான்சிஸ்.!

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப பதவி ஏற்ற பிறகு அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வருகிறார்.

இந்த நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அமெரிக்க ஆயர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் டிரம்ப் நிர்வாகத்தில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தோரை பெருமளவில் நாடு கடத்துவது பெரிய கண்டனத்திற்குரியது.

புலம்பெயர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் திட்டம் அவர்களின் உள்ளார்ந்த கண்ணியத்தை இழக்கச் செய்து மிகவும் மோசமான முடிவுக்கு தள்ளிவிடும்.

புலம்பெயர்ந்தோரை கவனித்துக்கொள்வதுதான் நமது முன்னுரிமை. அவர்களை நாடுகள் வரவேற்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

இந்தோனேசியாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine

ஈரானை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள்.

Maash

95 குழந்தைகளை பழி கொடுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி

wpengine