பிரதான செய்திகள்

அமெரிக்காவில் ஐ, வேதாளம் படங்களின் வசூலை முறியடித்தது விஜய்யின் ‘தெறி’

ஐ, வேதாளம் படங்களின் பிரீமியர் ஷோ வசூல் வரலாற்றை முறியடித்து விஜய்யின் ‘தெறி’ சாதனை படைத்துள்ளது. Select City Buy Theri (U) Tickets விஜய், சமந்தா நடிப்பில் நேற்று வெளியான தெறி யூ.எஸ் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

145 காட்சிகளின் மூலம் சுமார் 2 லட்சங்களை வசூலித்து இப்படம் சாதனை படைத்திருக்கிறது. யூ.எஸ் பாக்ஸ் ஆபீஸில் ரஜினி நடிக்காத படமொன்று இவ்வளவு வசூலிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ(1,68,795) மற்றும் அஜீத் நடிப்பில் வெளியான வேதாளம்(92,392) ஆகிய படங்களின் வசூல் சாதனையை தெறி முறியடித்துள்ளது. இந்தியா தவிர்த்து 31 நாடுகளில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

எல்லா இடங்களிலுமே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் வரும் நாட்களில் தெறி மேலும் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா (4,04,566), எந்திரன் (2,60,000) படங்களின் வசூல் சாதனையை, இன்னும் எந்தப் படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸ் நிலையத்தின் அறிவிப்பு , எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்.

Maash

தேசபந்துவின் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டது!

Maash

சிலாவத்துறை,புத்தளம் வைத்தியசாலை பிரச்சினைகளை தீர்த்து வைக்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை தொடர்பான பார்வை

wpengine