பிரதான செய்திகள்

அமெரிக்கா,இந்தியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அமெரிக்க இந்திய அரசாங்கங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்கு ஒருவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
கொழும்பு- புறக்கோட்டை அரச மரத்தடியில், அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவே இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக இலங்கையை பிளவுபடுத்துவற்கு பெரும் சூழ்ச்சி செய்யப்படுகிறதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை. உண்ணாவிரதம் இருக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள பதாதைகளில், இலங்கையில் கடற்படைத் தளம் அமைக்கும் முயற்சிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.

அத்தோடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிப்படத்துடன் கட்டப்பட்டுள்ள பதாதைகளில் இந்தியாவின் தலையீடுகளுக்கு எதிரான வாசகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்படுத்தவுள்ள புதிய அரசியலமைப்பானது நாட்டை இரண்டு துண்டுகளாகப் பிரிக்கும் முயற்சியாக அமைகின்றது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts

அதிபர்சேவை தரம் 3ற்கான நேர்முகப்பரீட்சை 14 – 20வரை! கல்வியமைச்சின் செயலாளர்

wpengine

எமக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. எமது பிணைப்பு மக்களுடனேயே உள்ளது.

Maash

ஜனவரி மாதம் முதலாம் திகதி 4000 ரூபா விசேட கொடுப்பனவு

wpengine