Breaking
Sat. May 18th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை)

கடந்த 27-10-2016ம் திகதி வியாழ கிழமை  வெளிமாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் தவம் மற்றும் முதலமைச்சர் உட்பட சிலர் உரையாடிக்கொண்டிருந்த போது மாகாண சபை உறுப்பினர் அன்வர் முதலமைச்சர் அலுவலகத்தினுள் எதுவித அனுமதியுமின்றி ஆசிரியர் கூட்டமொன்றுடன் நுழைத்துள்ளார்.இதனைப் பார்த்த மாகாண சபை உறுப்பினர் தவம் இவ்வாறு செயற்பட்டது பண்பற்ற விடயம் என்ற அடிப்படையில் காரசாரமான வார்த்தைகளை (சீயம்ட அலுவலகம் வேசையின் வெற்றிலைப் பெட்டி)  மேற்கொண்டுள்ளார்.அங்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தனது பகுதி மக்களின் பிரச்சினைகளைத் தான் பேசச் சென்றாலும் முதலமைச்சரது அனுமதியைப் பெற்று அவரது அறையினுள் ஆசிரியர்களை அழைத்து சென்றிருக்க வேண்டும்.அதற்காக ஆசிரியர்கள் முன்பு தவம் இவ்வாறு நடந்து கொண்டமையும் தவறுதான்.

முதலமைச்சர் அலுவலகத்தில் அனைவரும் உள் நுழைத்ததால் யாராலும் எவ்விடயத்தையும் பேச முடியவில்லை என்ற விடயம் தவத்தின் கோபத்தை நியாயப்படுத்திச் செல்கிறது.இந்த விடயத்தை வெளியில் கசிய விட்டதன் பெரும் பங்கு மு.கா முக்கியஸ்தர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என்றே பலரும் கருதுகின்றனர்.அண்மையில் இவருக்கும் மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கும் இடையில் சிறிய முரண்பாடும் தோன்றியிருந்தது.இச் செய்தியை வெளியிடும் போது அதனூடாக தனக்கு அழுத்தம் வரும் என்பது அவருக்கும் நன்றாகவே தெரியும்.அப்படியானால் இதனை அவர் யாரது ஊடக இணைப்பாளராகவுள்ளாரோ அவரது அனுமதியுடன் தான் செய்திருக்க வேண்டும்.குறித்த மு.காவின் முக்கியஸ்தருக்கு தவம்  மிகக் கடுமையான தொனியில் உங்களுக்கு நான் வேண்டுமா? குறித்த ஊடகவியலாளர் வேண்டுமா? என தகவல் அனுப்பியுள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண சபையில் அண்மையில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இலங்கை செயற்படவில்லை என்ற விடயத்தை மாகாண சபை உறுப்பினர் தவம் மற்றும் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் எடுக்க வேண்டும் எனக் கோரிய போது அது அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது என்ற வகையில் முதலமைச்சர் உட்பட த.தே.கூ சேர்ந்தவர்கள் அனுமதிக்க தயங்கியுள்ளனர்.இதன் போது தவம் மிகவும் கோபமடைந்து உரையாற்றியுள்ளார்.அது போன்றே பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலாவுதீனிற்கும் மாகாண சபையிலுள்ள மு.காவின் முக்கிய புள்ளி ஒருவருக்குமிடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.குறித்த நபரை சில விடயங்களை காரணம் காட்டி மாகாண சபையிலுள்ள மு.காவைச் சேர்ந்தவர்களின் அழுத்தத்துடன் உடனடியாக நீக்கப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.இவர் நீக்கப்படும் பட்சத்தில் இவரின் இடத்திற்கு தமிழ் இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படக் கூடிய நிலை இருந்தது.இதனை அறிந்த தவம் மாகாண சபையில் உள்ள சிலருடன் மிகக் கடுமையாக முரண்பட்டுள்ளார்.குறித்த செய்தி தவத்திற்கு எதிராக வெளியிடப்பட்டதன் பின்னணியில் இவ்வாறான விடயங்கள் இருக்கலாம் என்றே ஊகிக்கப் படுகிறது.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *