Breaking
Mon. Nov 25th, 2024

ஆங்கிலேயனே மலைத்து நிற்கும் ஆங்கிலத்தில் கொண்ட பொறாமையினால் மர்ஹூம் எம், எஸ். காரியப்பர் மீது ஊழல் குற்றச்சாட்டு.

அதுவரை கண்டிராத உச்சலாபத்தை ஈட்டி ஊழலற்ற உலகத்தரம்வாயந்த துறைமுகமாக இயங்கவைத்தன் மீது கொண்ட பொறாமையின் காரணமாக மர்ஹூம் அஷ்ரஃபுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை.

சட்டத்தின் முன் நிறுத்தி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க இயலாத கையாலாகாத தனத்தின் மீதான ஆத்திரத்தை ரிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையூடாக தீர்த்துக்கொள்ள முனைகிறது அதே பேரின மேலாதிக்கவாதங்கள்

ரிஷாத் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட அரசியல்வாதியல்ல.

ஆனால் அபாண்டங்களால் அவரை அடக்கக்கூடாது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை குமித்து ஒன்றையேனும் நிரூபிக்க முடியாமல் வருடக்கணக்காய் காத்துக்கொண்டிருந்தோருக்கு ஸஹ்ரானின் இரத்த வெறியாட்டம் பாலை வார்த்துக் கொடுத்துள்ளது.

சத்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜை ஒருவர் பற்றிய தகவல்களை இலங்கையின் இராணுவ தளபதியிடம் விசாரித்ததை பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக திரித்துக்கூறி இன்னும் சில புனைவுகளுடன் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப்பிரேரனையை கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டும்.

இவ்விடையத்தில் தனது துணிவான நிலைப்பாட்டை பகிரங்கமாய் அறிவித்த அமைச்சர் மனோ கனேசனுக்கு எமது நன்றிகள்.

ரிஷாத் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை.
கட்சி ரீதியாக பிரிந்து செயற்படும் பாராளுமன்றம் தீதமாக நடக்கும் என்று எதிர்பார்ப்பது தவறாகும்.

இதே பாராளும்ன்றம்தான உலகத்தின் முதல் பெண் பிரதமராய் வரலாறு பதித்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவினதும் பிரஜா உரிமையையும் ஜே. ஆரின் காழ்ப்புணர்ச்சிக்கு தீனி போட பறித்தது.

ஜனாதிபதிக்கும் எதிரான தீர்ப்புகளை வழங்கும் நம்பத்தகுந்த நீதித்துறையும், சிறப்பான விசாரணைத் திறமை கொண்ட பாதுகாப்பு துறையும் இருக்கும்போது ரிஷாத் மீதான குற்றச்சாட்டுகளை பாராளுமன்றத்துக்குள் விவாதிப்பதற்கு சட்டத்தில் இடமிருந்தாலும் தர்மத்தின் பார்வையில் ஒரு அடக்குமுறையே!

அமைச்ர் ரிஷாதின் அரசியல் நிலைப்பாடுகள், அனுகுமுறைகள் மீது எமக்கும் விமர்சனங்களுண்டு.
அது வேறு விடையம்.

ஆனால் அவர்மீதான அபாண்டங்களை ஆதரிக்கும் அளவுக்கு மனசாட்சியை விட்டுக்கொடுக்க முடியாது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ அமைச்சர் ரஊப் ஹகீமும் அவரது எம்பிக்களும் மொத்தமாக இப்பிரேரனையை எதிர்க்க வேண்டும்.
எதிர்ப்போம் என இப்போதே பகிரங்கமாய் அறிவிக்க வேண்டும்.
உளவியல் தோல்விக்கு வித்திட வேண்டும்.
தேவையேற்பட்டால் பாராளுமன்றத்தின் தற்போதைய சமநிலையை சவாலுக்குள்ளாக்க லேண்டும்!

பேரின அடக்குமுறைக்கு கைகட்டி திற்கும் எந்தத் தேவையும் முஸ்லிம் காங்கிரசுக்கு இல்லை என்பது எமது நம்பிக்கை

ரிஷாதின் விடையம் தனிமனித விடையமுமல்ல ஒரு சமூகத்தின் பிரச்சினையுமல்ல
மானிட தர்மத்தின் மீதான உச்சபட்ஷ அராஜகம்.
இதை பாகுபாடின்றி அனைவரும் எதிர்க்க வேண்டும்

இந்த பழிவாங்கல் ரிஷாதுடன் நிற்கப்போவதில்லை.
ஹிஸ்புழ்ழாஹ், ஆசாத் சாலி, முஜீபுர்ரஹ்மான், வாய்ப்பு கிட்டினால் ஹகீம் எனவும் தொடரும்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டும்
எவரும் அதிகாரத்தால் வஞ்சிக்கப்படக்கூடாது

-வஃபா பாறுக்-

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *