உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அதிக எடைகொண்ட வளர்ப்பு தாய், தனது மகன் மேல் அமர்ந்ததால் உயிரிழப்பு !

அமெரிக்காவில் அதிக எடைகொண்ட வளர்ப்பு தாய், தனது மகன் மேல் அமர்ந்ததால் உயிரிழந்த சம்பவத்தில் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

வளர்ப்பு மகன்
இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனிஃபர் லீ வில்சன் (48) என்ற பெண், டகோடா லெவி ஸ்டீவன்ஸ் என்ற சிறுவனை வளர்ந்து வந்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு வளர்ப்பு மகன் டகோடா சுயநினைவின்றி கிடப்பதாக ஜெனிஃபர் பொலிஸாரை தொலைபேசியில் அழைத்துள்ளார்.

உடனே அவரது வீட்டிற்கு சென்று பொலிஸார் பார்த்தபோது, சிறுவன் டகோடாவின் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் இருந்துள்ளது.

அவர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறை தண்டனை
பின்னர் பொலிஸார் ஜெனிஃபரிடம் விசாரித்தபோது, டகோடா பக்கத்துக்கு வீட்டிற்கு சொல்லாமல் சென்றுவிட்டதாகவும், அவரை அழைத்து வந்தபோதும் வெளியே போகிறேன் என்று அடம் பிடித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், சிறுவனின் மேல் அவர் 5 நிமிடங்கள் வரை அமர்ந்ததால், சிறிது நேரத்தில் சிறுவன் அசையாமல் கிடந்ததால் அவர் நடிப்பதாக நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஜெனிஃபர், சிறுவன் டகோடா வீட்டை விட்டு வெளியே ஓடிவிடக்கூடாது என்பதற்காகவே அவர் மேல் அமர்ந்ததாக விளக்கம் கொடுத்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் சிறுவன் டகோடா மூச்சுத்திணறி உயிரிழந்தது உறுதியானது. மேலும் அவருக்கு கடுமையான உள்ளுறுப்பு காயங்கள் ஏற்பட்டு இருந்தன என்பதும் தெரிய வந்தது.

154 கிலோ எடைகொண்ட ஜெனிஃபர் மேல் அமர்ந்ததால் சிறுவன் இறந்தது உறுதியானதால், அவரை கொலை செய்த குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பக்கத்து வீட்டு பெண்மணி அளித்த சாட்சியத்தில், தனது வீட்டுக்கு வந்த சிறுவன் ‘என்னை தத்தெடுத்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் பெற்றோர் முகத்தில் குத்திவிட்டனர்’ என்றார்.

ஆனால் அவரது முகத்தில் காயங்கள் எதையும் நான் பார்க்கவில்லை. அதன் பின்னர் ஜெனிஃபர் சிறுவனை அழைத்துச் செல்ல உடனடியாக வந்துவிட்டார் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

சவுதி மன்னருக்கு அல்கொய்தா எச்சரிக்கை

wpengine

இன்று காஷ்மீர் செல்லும் ராணுவ தளபதி தல்பீர் சிங்

wpengine

51வயதில் ஒரே! பிரவசத்தில் நான்கு பிள்ளைகள்

wpengine