பிரதான செய்திகள்

அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் இடையிலான தொடர்புகளை அதிகரிக்க நடவடிக்கை-ரணில்

எதிர்வரும் தேர்தல்களின் போது வெற்றியீட்டுவதாயின், 70 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அந்த இலக்கை அடைவதற்கு, அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துக்கொண்டு, அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென்றும், முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இறுதியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தூர விலகிச் சென்ற சிங்கள பௌத்த, கத்தோலிக்க, மத்தியதரக் குடும்பங்களைச் சேர்ந்த வாக்காளர்களினதும் கட்சியை விட்டுச் சென்றவர்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ள, கட்சி நடவடிக்கை எடுக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியைப் பலப்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக, புதிய அதிகாரிகள் சபையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள், இவ்வாண்டு ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, மாவட்ட ரீதியில் எமது அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் இடையிலான தொடர்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படும். இந்தப் பணிகள், இப்போது நிறைவடையும் கட்டத்தை அடைந்துள்ளன என்று, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இறுதி நிலை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க தீர்மானம்!

Editor

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை குறித்து சீனா செல்லும் அமைச்சர் அலி சப்ரி!

Editor

உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிசார் துப்பாக்கி சூடு!

Editor