பிரதான செய்திகள்

ஹாபீஸ் நசீருக்கு அமைச்சர் ஹக்கீம் கண்டனம் தெரிவிப்பு

கடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான கிழக்கு முதல்வர், கடந்த 20 ம் திகதி சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, கடற்படை அதிகாரி ஒருவரை தூற்றி இருந்தார்.

இந்த செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து, இராணுவ முகாம்களுக்குள் முதலமைச்சர் நசீர் அஹமட்டை அனுமதிப்பதில்லை என்றும், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் முப்படையினர் பங்கேற்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

Related posts

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கோதுமை மா!

Editor

இறக்கை உடைந்த மூதூர் இரத்த உறவுகள்!???

wpengine

மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்! 3 உலக சாதனைகள்

wpengine