பிரதான செய்திகள்

ஹலால் சான்றிதழ்கள் இலங்கைக்கு பாரிய நன்மைகள்

ஹலால் சான்றிதழ்கள் காரணமாக, இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹலால் சான்றிதழ் சபையின் கலந்துரையாடல் ஒன்றின் போது அந்த சபையின் மேலாளர் அலி பாதரலி இதனை தெரிவித்துள்ளார்

சர்வதேச சந்தையில் ஹலால் சான்றிதழ் உணவு வர்த்தகத்தின் வருமானம் 1.2 ரில்லியன் டொலர்களை வரை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் இதன் பொருளாதார நன்மைகளை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பெற்று வருகின்றன. எனவே இதன் நன்மைகளை இலங்கையாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஏற்கனவே ஹலால் சான்றிதழுக்கு பொதுபல சேனா உட்பட்ட பௌத்த அமைப்புக்கள் தமது கடும் எதிர்ப்பை காட்டிவரும் நிலையிலேயே இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

Related posts

பூஜித் ஜயசுந்தர, பிரதமருக்கு தேவையான வகையிலேயே செயற்பட்டார்.

wpengine

100 வயதினை தாண்டியோருக்கு 5000ரூபா

wpengine

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்! -மனோ கனேசன்-

Editor