பிரதான செய்திகள்

ஹக்கீம் தலைமை மு.கா. கட்சியினை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துகின்றது- சேகு

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள தாம் விரைவில்  புதிய கட்சி ஒன்றை பதிவு செய்ய எதிர்ப்பார்த்திருப்பதாக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் ஹக்கீமின் அதிருப்தியாளர்கள் தற்போது செயற்பட்டு வருகின்றனர்.

இது தனியாக முஸ்லிம்களின் அபிலாசைகளை நோக்காகக்கொண்டு இயங்கும் கட்சியாக இருக்கும்  என்று சேகு இஸ்ஸதீன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஹக்கீமின் கொள்கையுடன் முரண்படும் பலர் புதிய அரசியல் முன்னணியில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தமது அரசியலை தனிப்பட்ட வாழ்க்கைக்காகபயன்படுத்தி வருகிறார்.

முஸ்லிம்களுக்காக குறிப்பாக கிழக்கின் முஸ்லிம்களின் நலன்களைஅவர் புறந்தள்ளி வருகிறார் என்றும் இஸ்ஸதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

சுதந்திரக் கட்சியை சேர்ந்த பலர் தாமரை மொட்டுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

wpengine

5000 ரூபா பணம் கொடுத்து உதவி செய்த கே.காதர் மஸ்தான் (பா.உ)

wpengine

அமைச்சர் றிஷாட்,சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பொதுபலசேனா முறைபாடு

wpengine