ஹக்கீம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்! பொன்சேகா இணைய வேண்டும்.

ஆளுங்கட்சியுடன் இணையுமாறு முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அழைப்பு விடுத்துள்ளார் .


நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயேஅவர் இந்த அழைப்பை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,


சரத் பொன்சேகா முக்கியமான நபர். அவரை நாம் மதிக்கின்றோம். இராணுவத் தளபதியாக இருந்தபோது கம்பீரமாக இருந்தார்.

இன்று அந்தப் பக்கம் சென்று பலவீனமடைந்துள்ளார்.
கடந்த நல்லாட்சியின் போது அவர் பாதுகாப்பு அமைச்சை எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு வனஜீவராசிகள் அமைச்சுப் பதவியே வழங்கப்பட்டது.


நிதி கூட உரிய வகையில் ஒதுக்கப்படவில்லை. எனவே, எங்கள் பக்கம் வாருங்கள் உங்களை மதிக்கின்றோம்.


அத்துடன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் ஐக்கிய மக்கள் சக்தியினரை நம்பி இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares