ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது மாநாடு இன்று

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது மாநாடு இன்று காலை அம்பாறை, பாலமுனை பொது விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
இம் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஷேட அதிதியாகவும் கலந்து கொள்கின்றனர்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

கட்சியின் யாப்புக்கு அமைவாக இவ்வாறான மாநாடு ஒன்று இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கட்சியின் தற்போதைய நிலமை, கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக இந்த மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவரால் பேராளர்கள் மத்தியில் உரை நிகழ்த்தப்படவுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares