பிரதான செய்திகள்

வீட்டுத்திட்டத்தில் குளறுபடி! பிரதேச செயலகத்தை முற்றுகையீட்ட பொது மக்கள்

முல்லைத்தீவு மாவட்டதில், வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி வீட்டுத்திட்ட பயனாளிகள் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இன்று காலை 9.00 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 500க்கும் மேற்பட்ட பாயனாளிகள் ஒன்று கூடியிருந்தனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டதில் கடந்த மாதம் தொடக்கம் வீட்டுத்திட்டம் வழங்குவது தொடர்பாக பிரதேச செயலகத்தினால் கிராமம் கிராமமாக ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

ஆய்வுகளின் முடிவாக கடந்த வாரம் 17ம் திகதி புள்ளிகளின் அடிப்படையில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு கிராம சேவையாளர் ஊடக அறிவிக்கப்பட்டது.625.0.560.320.160.600.053.800.668.160.90

குறித்த ஆய்வில் குறைபாடுகள் இருப்பதாக பயனாளிகள் பிரதேச செயலகத்தில் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர். அதன் காரணமாக பிரதேச செயலகம் இன்று பயனாளிகளை விசாரணைக்கு அழைத்திருந்தது

இதன்போது ஏற்கனவே முறைப்பாடு செய்தவர்களை பிரதேச செயலாளர் சந்தித்து விசாரித்துள்ளார்.

பயனாளிகளின் முறைப்பாடுகளுக்கு ஏற்ப குறைந்த புள்ளிகளின் அடிப்படையில் வரும் வீட்டுத்திட்டங்களை எதிர்காலத்தில் வழங்கமுடியும் என்று பிரதேச செயலாளர் பதிலளித்துள்ளார்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

ஏற்கனவே முறைப்பாடு செய்யாமல் இன்று சமூகமளித்த பயனாளிகள் முறைப்பாடுகளை புதிதாக பதிவு செய்துள்ளனர்.

பிரதேச செயலகம் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான பயனாளிகள் இன்று சமூகமளித்ததால் ஏனைய பயனாளிகளுக்கு எதிர்வரும் 07-06-2016 செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும்படி பிரதேச செயலக நிர்வாகம் அறிவித்துள்ளது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

Related posts

முஸ்லிம் குடியேற்றம் வில்பத்து மீதான அமைச்சர் றிஷாட்டின் வழக்கு பெப்ரவரி

wpengine

றிஷாட்டை தாக்க முட்பட்ட சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்

wpengine

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற பெயரில் ஞானசார தேரருடன் கூட்டு சேர்ந்த முஷ்ரப்

wpengine