வீடமைப்பு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் மறுப்பறிக்கை

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஏற்றுக்கொண்டதாகவும் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் நியாயங்கள் உள்ளதாகவும் அதனால் வீட்டுத் திட்டம் தொடர்பில்; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆராய்ந்து வருவதாகவுமே நான் இதன் போது தெரிவித்திருந்தேன்.
ஆனால், ‘குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார் ஹிஸ்புல்லாஹ்’ என்ற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது. இதனால் சுமந்திரன் முன்வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் ஏற்றுக் கொண்டதாக அது திரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆகவே தயவு செய்து பிழையான செய்திகளை வழங்கி மக்களை திசைதிருப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares