பிரதான செய்திகள்

விவசாய நிலங்கள் தொடர்பாக அரசாங்கம் அக்கறை காட்டவில்லை

விவசாயிகளுக்கு ஏற்படும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அகில இலங்கை விவசாய சம்மேளம் தெரிவித்துள்ளது.

அந்த சம்மேளனத்தில் தேசிய அமைப்பில் நாமல் கருணாரத்ன இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.

கடந்த நாட்களில் இடம்பெற்ற அனர்த்த நிலைமைகளின் போது ஏற்பட்ட ஏனைய அழிவுகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்திய போது பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்கள் தொடர்பாக அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என அவர் குற்றம்சுமத்தினார்.

விவசாயிகளுக்காக இதுவரை கிடைக்காத உர மானியங்களை எதிர்வரும் 5 நாட்களுக்குகள் விவசாயிகளுக்கு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை நீண்டகாலம் பாதுகாக்கும் பொருட்டு பலவித ரசாயண பொருட்கள் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாகவும் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.

அதேபோன்று சோளம் உற்பத்திற்காக உரிய விலை இதுவரை கிடைக்கவில்லை எனவும், அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

சவுதி அரேபியா எப்படி கனடாவை பழி வாங்குகிறது

wpengine

மன்னார்-புதுவெளியில் மோதல்! ஒருவர் மீது வாள்வெட்டு

wpengine

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்:

wpengine