செய்திகள்பிரதான செய்திகள்

உத்தரவாத விலைக்கு விவசாயிகள் நெல் வழங்க தயார் இல்லை .!

நெல் விலையுடன் ஒப்பிடுகையில் அரிசி விலைகள் அதிகரிக்கும் அபாயம்குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார். 

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார். 

பெரும்போக நெல் அறுவடை நடவடிக்கைகள் தொடங்கிய பின்னணியில், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவித்தது. 

கடந்த 6 ஆம் திகதி முதல் நெல் அறுவடைக்காக அரசு நெல் களஞ்சிய சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்தபோதிலும், இன்றும் விவசாயிகள் அந்தக் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லைக் கொண்டு வரவில்லை.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட உத்தரவாத விலையில் நெல் வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று பொலன்னறுவை பிரதேச விவசாயிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. 

இதேவேளை அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 11,330 மெட்ரிக் டன் உப்பு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

Related posts

யாழ் வைத்தியசாலை நோயாளர்களை பார்வையிட வருவோர் தவிர்க்கவேண்டும்

wpengine

விசித்திரமான காதல் ஜோடி (படங்கள்)

wpengine

மு.கா.கட்சியின் புதிய பொது செயலாளர் நியமனம்

wpengine