வில்பத்து தேசிய வனம்;இலவங்குளம் பாதை மூடப்பட்டது.

வில்பத்து தேசிய வனம் மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமை காரணமாக எதிர்வரும் 25ம் திகதி வரை வில்பத்து தேசிய வனம் மூடப்பட்டிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

வனப்பகுதி மற்றும் அதன் பிரதான வெளிப் பாதைகள் உள்ளிட்ட பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியிருப்பதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் சுமித் பிலபிட்டிய கூறினார்.

மரிச்சிகட்டியில் இருந்து வில்பத்து ஒற்றையடி பாதையின் ஊடாக புத்தளம் செல்லும் பாதை சிரின்மையால் தற்காலிகமான முறையில் போக்குவரத்து தடைபெற்று இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares