பிரதான செய்திகள்

விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலை ஆவாரா?

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட்ட 6 பேர் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் ஹூசைன் இலங்கை வந்த போது, அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக தெரிவித்து கறுவாத்தோட்டம் பொலிஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்காக முன் அனுமதி மற்றும் ஒலிபெருக்கி அனுமதி என்பன பெறப்படவில்லை என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில்…

Maash

Ghibli- style Ai image ஆபத்தின் மறுபக்கம் அவதானம் . ..

Maash

விவசாயிகளுக்கு இன்று முதல் டோக்கன் மூலம் எரிபொருள்

wpengine