விசாரணைகளை துரிதமாக நடத்தி ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும்!

புதிய சட்டமா அதிபரின் கீழ் ஊழல், மோசடிகள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளை துரித்தப்படுத்தி சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டும் என ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர், முன்னைய அரசாங்கத்தின் கீழ் நடந்த மிகப் பெரிய ஊழல் மோசடிகள் குறித்து கண்டறிய நாங்கள் ஒன்றிணைந்தோம்.

ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு தேவையான தகவல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கி நாங்கள் உதவினோம்.

நியாயமான, ஒழுக்கமான சமூகத்தையும் சுதந்திரம் மற்றும் சட்டத்தை மதிக்கும் நாட்டை கட்டியெழுப்பவே நாங்கள் இதனை செய்தோம்.

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் செய்த ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வருவதே எமது நோக்கம்.

ஊழல்வாதிகளை பாதுகாத்து, ஊழலுக்கு இந்த அரசாங்கம் உதவாது என தாம் எண்ணுவதாகவும் சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares