பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனின் இனவாத செயற்பாடுகளுக்கு பின்னால்! இரா. சம்பந்தன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் இனவாத செயற்பாடுகளுக்கு  பின்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.  சம்பந்தன் உள்ளிட்டவர்கள் உள்ளனர் என கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  மக்களுக்காக வீதியில் இறங்கி போராடிய போதும் தேசிய அரசாங்கம் குறித்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

 ஆனால் எழுக தமிழ் பேரணிக்கு எந்த விதமான சட்டத்தையும் பிரயோகிக்காமல் மௌனம் காப்பதன் மர்மம் என்ன எனவும் கேள்வியெழுப்பியது.

 முதலமைச்சர் என்ற வகையில் வட மாகாணத்தில் எந்த விதமான அபிவிருத்தி செயற்பாடுகளையும் செய்யாமல் அந்த குற்றச்சாட்டில் இருந்து  தப்பித்துக் கொள்வதற்கு இவ்வாறான இனவாத  போக்கினை விக்கினேஸ்வரன் முன்னெடுகின்றார் எனவும் தெரிவித்தது.

இதனை கூட்டு எதிர்க் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது. நாட்டின் துளிர்விடுகின்ற இனவாத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்தும் போராடுவோம்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உருப்பினரும் கூட்டு எதிரணியின் உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Related posts

சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல

wpengine

தீர்ப்பை முன்னிறுத்தி ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை

wpengine

வவுனியா முஸ்லிம்களின் கடையினை இலக்கு வைக்கும் நகர சபை

wpengine