வாக்களித்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்காத தலைவர் ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனை அழைத்து வந்து தேசிய மாநாட்டிற்கு அழைத்து உரையாற்ற சந்தரப்பம் வழங்கி தமிழர்களின் பிரச்சினை குறித்து
ஜனாதிபதிக்கு எடுத்துரைக்க செய்வது், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை அழைத்து வந்து செயலமர்வு போன்றவற்றை செய்வதை நிறுத்திட்டு தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இருக்கின்ற காணிப்பிரச்சினைக்கு தீர்வைக்காண முன்வரலாம், அக்கரைப்ற்று முஸ்லிம்களுக்கும்
அக்கரைப்பற்று தமிழர்களுக்கும் நெடுங்காலமாக இருந்துவரும் வட்டமடு காணிப்பிரச்சினைக்கு தமிழ் தலைமைகளோடு பேசி தீர்வைக்காண இந் நல்லாட்சியில் முயலாதிருப்பது மிகவும்
கவலையான விடயமாகும்.


சிறுபான்மை மக்களின் வாக்குகளால் அரியாசனம் ஏறிய நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற காணி மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து இலகுவில் தீர்வை காணலாம் இது
தவிர நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை தடுத்து நிறுத்திய ஹெல உறுமய இன்று நல்லாட்சியில் இருக்கிறது அவர்களுடன் சுமுகமாக பேசி அவ்வீட்டுத்திட்டத்தை பயனாளிகளுக்கு
பகிரந்தளிக்கலாம்.

இன்று முஸ்லிம் காங்கிரஸிடம் தான் நகரத்திட்டமிடல் அமைச்சு இருக்கிறது காணியின்றி இருக்கும் பள்ளிவாசல்கள் மஹிந்த அரசில் இடமாற்றப்பட்ட பள்ளிவாசல்களுக்கு இட
ஒதுக்கீடு என்று பலவிடயங்களை சாதிக்கலாம். அடுக்கடுக்காய் முஸ்லிம்களுக்கு செய்து
கொடுக்க ஆயிரம் விடயங்கள் இருந்தும் இன்றிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஏன் மௌனித்து முக்காடிட்ட அரசியல் செய்கிறது என்று யாருக்கும் புரியவில்லை.

10407760_1796145953952078_983276160554353681_n

ஹலால் சான்றிதளை மீளவும் ஜம்மியதுல் உலமாவிடம் வழங்கலாம், மௌலவி ஆசிரியர் நியமனம் குறித்து அதிகம் கரிசனை செலுத்தலாம், முஸ்லிம்களை முக்கிய உயர்பதவிகளுக்கு
நியமிக்கலாம். இதுவெல்லாம் இந்தக்காலத்தில் தான் செய்து முடிக்கமுடியும்.

தேர்தல் காலத்தில் ஆயிரம் பொய்களுடன் வந்து வாக்குகள் கேட்டுவிட்டு பாராளுமன்றம் சென்ற பிறகு மக்களை மறந்து விடுகிறீர்கள். அல்குர்ஆனையும் அல் ஹதீதையும் யாப்பாக கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதுகுறித்து அதிகம் கவனம் எடுக்க முடியும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares