வாகன விபத்து தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் இன்று விசாரணை நடத்தவுள்ளது.

மீரிஹன பொலிஸ் குழு ஒன்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் இன்று விசாரணை நடத்தவுள்ளது.

கடந்த 28ஆம் திகதியன்று ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த விபத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இந்தநிலையில், விபத்தின்போது அமைச்சரே வாகனத்தை செலுத்தியதாக சாட்சிகள் கூறியுள்ளனர்.

எனினும் தமது சாரதியே வாகனத்தை செலுத்தியதாக அமைச்சர் பாட்டலி கூறிவருகிறார்.

இதனையடுத்தே அமைச்சரிடம் மீரிஹன பொலிஸார்  இன்று விசாரணையை நடத்தவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares