வாகன உரிமையாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு! பொலிஸ்

நடை பாதையில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் பொறுப்பான இயக்குனர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவிவத்துள்ளார்.


கிரேன்கள் அல்லது சில பொருட்களை பயன்படுத்தி நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.


அதற்காக செலவாகும் பணத்தை உரிமையாளர்கள் செலுத்த நேரிடும் எனவும், வாகனங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனையும் உரிமையாளர்கள் ஏற்க நேரிடும் எனவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares