பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா சதொச நிலையத்தில் பொருட்கள் பதுக்கல்

(கதீஸ்)
வவுனியா நகரை அண்மித்து அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் சில பதுக்கப்பட்டிருந்த­தாகக் கூறப்பட்டதால் அவை பாவ­னையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்­டுள்ளன.


மீன் ரின் விலை குறைக்கப்பட்டுள்­ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜ­பக் ஷ வெளியிட்ட விசேட அறிவிப்­பையடுத்து அதனை பொதுமக்கள் கொள்வனவு செய்வதும் நேற்றுஅ­திகரித்துக் காணப்பட்டது.

இந்த நிலையில் வவுனியா நகரை அண்­மித்துள்ள சதொச விற்பனை நிலை­யத்தில் காசாளர் மேசையின் கீழ்ப்ப­குதியில் மீன் ரின்கள் இருந்த­போதும் அவை முடிவடைந்து விட்­டதாகத் தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பாவ­னையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு பொது மகனொ­ருவர் தகவல் வழங்கியதனையடுத்து சதொச விற்பனை நிலையத்துக்கு விரைந்த பாவனையாளர் அலு­வல்கள் அதிகார சபையினர் பரிசோ­தனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்­தனர்.


இதன்போது களஞ்சிய அறையிலி­ருந்து ஒரு பெட்டி மீன் ரின்னைக் கைப்பற்றியதுடன் காசாளர் மேசையின் கீழ் பகுதியில் இருந்த மீன் ரின்களும் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட மீன்டின்களை மக்க­ளுக்கு விற்பனை செய்யுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதி­கார சபையினர் சதொச உத்தியோ­கத்தர்களுக்கு உத்தரவு பிறப்பித்த­மையையடுத்து பொது மக்க­ளுக்கு மீன் ரின் விநியோகிக்கப்பட்டது.

Related posts

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வவுனியா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.

Maash

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பை காட்டிய! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

wpengine

முஸ்லிம்களின் மனதை புண்படுத்திய விக்னேஸ்வரன்! மன்னிப்பு கேட்ட வேண்டும்.

wpengine