வவுனியா அரச உத்தியோகத்தரின் தொலைபேசிக்கு ஆப்பு வைத்த குரங்கு

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியபரிபாலகர் ஒருவரின் பெறுமதிமிக்க தொலைபேசியை குரங்கு ஒன்று தூக்கிசென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


நேற்று மாலை வவுனியா வைத்தியசாலைக்குள் நுழைந்த குரங்குகள் அங்கு வைக்கப்பட்டிருந்த தாதியபரிபாலகர் ஒருவரின் தொலைபேசியை தூக்கிச்சென்றுள்ளது.


எனினும் அதனை துரத்திசென்ற நிலையில் மதில் வழியாக பாய்ந்த குரங்கு திருடிய தொலைபேசியுடன் ஏ9 வீதியில் உள்ள மரம் ஒன்றில் ஏறிக்கொண்டுள்ளது.


பல முயற்சிகள் எடுத்த நிலையில் நீண்ட நேரமாகியும் குறித்த குரங்கு தொலைபேசியை கீழே வீசவில்லை.
வவுனியா நகரப்பகுதியில் சிறியான் ரக குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருவதுடன் வியாபார நிலையங்களிற்குள் செல்லும் அவை அங்கிருக்கும் பொருட்களையும், பணப்பைகளையும், தூக்கிச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares