Breaking
Sat. Apr 20th, 2024

இம்முறை கணிசமான முஸ்லிம்கள் இன வேறுபாடின்றி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிப்பாா்கள் என நம்புகின்றேன் என தெஹிவளை – கல்கிஸை மாநகர சபையின் முன்னாள் மேயரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார்.


மாளிகாவத்தையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


கொழும்பு மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் அமைச்சா் காமினி லொக்குகே, ரியா் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரும் இங்கு உரையாற்றினாா்கள்.


இந்த நிகழ்வில் கொழும்பு மாநகர சபை உறுப்பிணா்களான சாமிலா, தெகிவளை மாநகர சபை உறுப்பிணா் சரினா, மகிந்தபாலா, சுயாதீன தொலைக்காட்சி முன்னாள் பணிப்பாளா் சபை உறுப்பிணா் புரவலா் காசீம் உமா், சப்றாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


தொடா்ந்து உரையாற்றிய தனசிறி அமரதுங்க,


கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் நான் 8ஆவது நிலைக்கு வந்தேன். அதில் 7 பேர் தெரிவு செய்யப்பட்டனா். எனக்கு 1300 வாக்குகள் குறைந்தமையால் நான் நாடாளுமன்றம் செல்ல முடியவில்லை. 7ஆவது நிலைக்கு வந்த மோகான் லால் கேரு இம்முறை தோ்தல் கேட்கவில்லை. ஆகவே, இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சாா்பில் கொழும்பு மாவட்டத்தில் 12 பேர் கட்டாயம் நாடாளுமன்றம் செல்வாா்கள். அதில் நான் உள்ளடக்கப்படுவேன் என்று நம்பிக்கை உண்டு.
நான் 3 முறை இரண்டு கட்சிகளிலும் தெகிவளை கல்கிசை மேயராக இருந்துள்ளேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் எனக்குத் தந்த ஒத்துழைப்பால் தெஹிவளை – கல்கிசைப் பிரதேசத்தில் யாரும் குறை கூறாத அளவுக்கு எனது சேவையை செய்துள்ளேன்.


சமையறையில் இருந்து மலசலகூடம் செல்லும் அளவுக்கு சகல வீதிகளும் காபட் இடப்பட்டுள்ளன. நான் தோல்வியுற்றாலும் கட்சியைவிட ராஜபக்ச குடும்பங்களுடனேயே இருப்பேன். கடந்த காலத்திலும் அவா்கள் காலடியில்தான் இருந்து வந்துள்ளேன்.


மற்றவா்கள் போன்று பணத்துக்கும் பதவிக்கும் அங்கும் இங்கும் நான் கட்சி மாறவில்லை.
இம்முறை கொழும்பு மாவட்டத்தில் பழைய நாடாளுமன்ற உறுப்பிணர்கள் 6 பேரும், புதியவா்கள் 16 பேரும் எமது கட்சியில் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளாா்கள். நீங்கள் பழையவா் ஒருவருக்கும், புதியவா் இருவருக்கும் விருப்பு வாக்குகளை அளித்து நாடாளுமன்றம் செல்ல வாய்ப்புத் தாருங்கள்.


இந்த நாட்டில் இன, மத பேதமின்றி சகலரும் சமாதானமாக வாழ்வதற்கு நாம் நல்லதொரு சூழ்நிலையை ஏற்படுத்தல் வேண்டும். கடந்த காலங்களில் அங்கும் இங்கும் பாய்ந்தவா்களுக்கு வாக்களிப்பதில் மறுபரிசீலனை செய்யுங்கள்.


இந்த நாட்டின் அரசியலை மிகவும் பாழடைந்த நிலைக்குக் கொண்டு சென்றவா்தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இருந்தும் இம்முறை எமது கட்சியில் அவருக்கு வாக்குக் கேட்க சந்தா்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.


ஆகவே, இம்முறை கணிசமான முஸ்லிம்கள் இன வேறுபாடின்றி எமது கட்சிக்கு வாக்களிப்பாா்கள் என நம்புகின்றேன்.
நாம் தமிழா்களைச் சீண்டி இந்தியாவைப் பகைத்துக்கொண்டு போர் செய்தோம். அதிலிருந்து மீள 30 வருடங்கள் கடந்தன. அதில் சகலரும் துன்பப்பட்டோம்.
ஆனால், முஸ்லிம்களைச் சீண்டி நாம் போர் செய்தால் இந்த உலகிலுள்ள 100 க்கும் மேற்பட்ட அரபு நாடுகளுடன் இராஜதந்திரத்தை முறித்துக்கொள்ள வேண்டி ஏற்படும். கடந்த காலங்களில் சில முஸ்லிம்களை சிலர் சீண்டினாா்கள். எனினும், அது தடுத்து நிறுத்தப்பட்டது.


நாம் ஐக்கியமாகவே வாழ்வோம். இங்கு 200க்கும் மேற்பட்ட கொழும்பு மத்தி வாழ் மக்கள் கூடியிருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் 50 போ்களைத் திரட்டி வாக்களிப்பதற்கு உதவி புரியுங்கள். கொழும்பு மாவட்டத்தில் எமது கட்சியிலிருந்து 12 பேருக்கும் அதிகப்படியான உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவீா்கள் என எதிா்பார்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *