Breaking
Sat. Dec 21st, 2024

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி நேற்று அம்பாறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது சொந்தங்களுக்கு நீதி கோரி 2000 நாட்கள் பூர்த்தியாவதையொட்டி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

வடக்கு – கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

A B

By A B

Related Post