பிரதான செய்திகள்

வடக்கு மக்களுக்கு காணியும், பொலிஸ் அதிகாரமும் வழங்கப்படவேண்டும்-அத்துரலியே ரத்தன தேரர்

வடக்கு மாகாணத்துக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய பேரவையின் நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கலாம் என்று பலரும் கூறுகின்றனர். இதனை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

வடக்கு மக்களுக்கு காணியும் பொலிஸ் அதிகாரமும் வழங்கப்படவேண்டும் என்பதே தமது நோக்கமும். வறுமையில் உள்ளவர்களுக்கு காணிகள் பகிரப்படவேண்டும்.

இதனையே முன்னாள் பிரதமர் டி எஸ் சேனாநாயக்கவும் மேற்கொண்டதாக அத்துரலியே ரத்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடக்கு மாகாணத்துக்கு பகிரப்படும்போது படையினரின் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின்கீழ் வைக்கப்படவேண்டும்.

அந்த படையினரை எந்த தருணத்திலும் வடக்குக்கு அனுப்பக்கூடிய நிலை உருவாக்கப்படவேண்டும் என்றும் ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்

Related posts

50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய முடியாதவாறு உத்தரவு-கோட்டை நீதவான்

wpengine

Islamic Relief based London INGO help 1,100 families in Kolannawa, Welampitiya

wpengine

நிவாரணப் பொருட்களுடன் 2 கப்பல்கள் இலங்கை வருகை

wpengine