Breaking
Thu. Apr 25th, 2024
  • ஏ.எச்.எம்.பூமுதீன்

இனி நடக்கப்போவது…..!

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மலையக யுவதி ஹிஷாலினி மரணித்து விட்டார்.

இதன் காரணமாக – ரிஷாதின் – மனைவி , மாமனார் கைது செய்யப்பட்டு – விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

12 வயதில் – ஹிஷாலினியை – வேலைக்கு அனுப்பிய தாய் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது ஏன்?

12 வயதில் வேலைக்கு சென்ற இஷானி 16 வயதில் ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு வரும் வரையான இடைப்பட்ட அந்த 4 வருடங்களும் கடமையாற்றிய வீட்டு எஜமான்கள் யார்? அவர்கள் விசாரிக்கப்படாதது ஏன் ?

12 வயது மகளை வேலைக்கு அனுப்பாமல் ” நீ” அந்த வேலைக்கு போயிருக்கலாம்தானே? என்று இதுவரை அந்த தாயைப் பார்த்து எந்தவொரு மலையக – அரசியல்வாதியோ , மலையக ஊடகவியலாளர்களோ , மலையக புத்திஜீவிகளோ கேட்கவில்லை ஏன்? என்பதற்கு இவர்களிடம் உள்ள பதில் என்ன?

ஹிஷாலினியின் தாயின் தனிப்பட்ட நடத்தை முறையின் பிரதிபலிப்பே 12 வயதில் இஷானி வேலைக்கு சென்றால் என்று ஆங்காங்கே பேசப்படும் காரணியின் உண்மைத்தன்மையை இதுவரை இரகசிய சுயாதீன ஆய்வை டயகம பகுதியில் மேற்சொன்ன தரப்பினரும் அரசாங்கமும் அறிந்து கொள்ள முற்படாதது ஏன் ?

மலையக மக்களின் வறுமை நிலையை இல்லாதொழிக்க வக்கற்றுப்போன சில மலையக தலைவர்கள் – ஹிஷாலினி விவகாரத்தை பூதாகரமாக்கி வருகின்றனர்.

ஹிஷாலினி தற்கொலை செய்து கொண்டார் என கூறிய பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை உடனே இடமாற்ற வேண்டும் என கூக்கிரலிட்டார் மனோ கணேசன் எம்பி.

அதையும் தாண்டி – ஹிஷாலினியோடு மூதூர் ரிஸானா நபீக்கையும் இணைத்து , இருவரும் வறுமை நிலையாலேயே மரணித்தனர் என அனுதாபம் கூறி – தான் ஒரு இனவாதியல்ல என்ற பாசாங்கை வெளிப்படுத்தி முடிச்சும் போட்டார் மனோ.

மலையக சமுகம் – வறுமைப்பட்ட சமுகம்.
இதுவரை ரூபா 1000 நாட் கூலியே கிடைக்கவில்லை.

அந்த சமுகத்தில் – பெரும்பாலான இளைஞர் , யுவதிகள் – நாடு பூராவும் முஸ்லிம்களின் கடை மற்றும் வீடுகளில் பெரும் எண்ணிக்கையிலும் ஏனைய தமிழ்- சிங்கள மக்களின் கடை மற்றும் வீடுகளில் சிறு எண்ணிக்கையிலும் வேலை செய்கின்றனர்..

இனி – இவர்கள் , தத்தமது எஜமானர்களால் குறித்த வேலையிலிருந்து நிறுத்தப்படலாம். ஹிஷாலினி விவகாரம் பூதாகரமாக்கப்பட்டதன் அச்சத்தின் காரணமாக.

இதனால் – மலையக சமுகம் இன்னும் இன்னும் வறுமையால் பின் தள்ளப்படும்.

வெட்கம் கெட்டு – இந்த வறுமைப்பட்ட மக்களிடமே சந்தா பெற்று கட்சி நடத்தும் அரசியல் தலைமைகள் திண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். “மனோ”வியாதி பீடிக்கும்.

சந்தா மறுக்கப்படும் ; வேலையிழந்த இளைஞர் , யுவதிகள் கொதித்தெழுவர் ; சிலரின் அரசியல் செல்வாக்கு வீழ்ச்சி பெறும்.

அதன் பின்னர் தான் சிந்திப்பார்கள் – அநியாயமாக – அதர்மமாக ஹிஷாலினி விடயத்தில் நடந்து கொண்டோமே ; ரிஷாத் பதியுதீன் குடும்பத்தினரை மானபங்கப்படுத்தினோமே என்று..

ஊழியம் விற்றுப் பிழைக்கும் சமூகத்தை ஊனமுற்ற சமூகமாக மாற்றி விடாதீர்கள்
“அரசியல் வாதிகளுக்கும் ஊடகத்துறையினருக்கும்”

மூத்த சகோதரன் இருக்க உழைப்புக்காக தூண்டப்பட்ட ஹிஷாலினியின் உறவுகளை நினைத்து மனம் வெட்கித்துப் போகிறது.

தேயிலைக் கொழுந்துகளுக்கிடையில் உயிர்ப் போராட்டம் நடாத்தும் மலையகச் சகோதரிகளின் வாழ்வை மேம்படுத்த முடியாமல் முக்காடிடும் மலையக அரசியல்வாதிகள் ஹிஷாலினியின் மரணத்திற்குள் உள் நுழைந்து கொக்கரிப்பதேனோ?…கொரோனா கொத்தித் தின்னும் ஏராளமான ஹிஷாலினிகள் இன்னும் எத்தனை மலையக
லயன்களிலே சுருண்டு கிடக்கிறார்கள். அவர்களது வாழ்வில் ஒளியேற்றுங்கள்…

தகவலறியும் சட்டத்தின் கீழ் ஹிஷாலினியின் கையடக்க தொலை பேசித் தொடர்புகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்

இறுதியாக – முஜிபுர் ரஹ்மான் எம்பி இப்படிக் கூறுகிறார்….

உண்மை ஒரு நாள் வெளிப்பட்டேயாகும்

பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கொண்டிக்கும் இந்த தருணத்தில் அவருக்கு மேலும் அழுத்தங்கள் கொடுக்க அவரின் வீட்டாருக்கு எந்த அவசியமும் இல்லை.

நடந்த அசம்பாவிதத்தை உடனடியாக பொலிஸுக்கு அறிவித்து தீக்காயங்களுக்குள்ளான பெண்ணை காப்பாற்றவே அவர்கள் முயற்சித்துள்ளனர்.

இதுவோர் தற்கொலையா இல்லை கொலையா என்ற விவாதங்களும் விசாரணைகளும் தொடர்ந்தாலும் ரிஷாதின் மனைவி,மாமனார் ஆகிய இருவரும் அந்த பணிப் பெண்ணைக் காப்பாற்றவே முயன்றுள்ளனர் என்பது ஏற்கனவே நடைபெற்ற விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளன.

தனது மகள் துன்புறுத்தப்படுவதாக தொலைபேசியில் என்னிடம் கூறினார் என்று கூறும் பெற்றோர் உடனடியாக அந்த விடயத்தை பொலிஸுக்கு அறிவித்து மகளை ரிஷாத் பதியுத்தீனின் வீட்டிலிருத்து மீட்டு எடுத்திருக்கலாம்.

அல்லது நேரில் சென்று பார்த்திருக்க முடியும். மகள் மரணமானதன் பின்னர் முன்பின் முரணான வாக்குமூலங்களையும், வீண் பழிகளையும் சுமத்தும் இந்த பெற்றோர்களையே முதலில் சரியான முறையில் பொலிஸார் விசாரித்தால் கொலையா தற்கொலையா என்று விளங்கும்.

தனது மகள் துன்பறுத்தப்படுவதாக அறிந்திருந்தும் பொலிஸாருக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்கத்தவறியதே இந்த மரணத்துக்கு முழுக்காரணமாய் இருக்கும்போது அவர்கள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்?

மகளை பறிகொடுத்த ஒரு தாயின் உணர்வை நாம் மதிக்கின்றோம்.

இருந்தாலும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட வேண்டியவர்கள் பொடுபோக்காக இருந்த பெற்றோர்களும்தான்..

மேலும் இனவாதிகளின் அதி உச்ச இனவாத பேச்சுக்களுக்கும், ஒன்றுக்கொன்று முரண்பட்ட மீடியாக்களின் செய்திகளுக்கும் ஒரு மரணத்தை அரசியல் மயமாக்கும் வங்குரோத்து அரசியல் வாதிகளுக்கும் தீணி போடும் வகையில் இந்த மரணம் அமைந்துவிட்டது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *