பிரதான செய்திகள்

வசந்த முதலிகே பிணையில் விடுதலை!

நேற்று கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே கொழும்பு கோட்டை நீதமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை மயானத்திற்கு அருகில் வைத்து குருந்துவத்தை பொலிஸார், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகேயை நேற்று கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் இரத்தினபுரியில் அமைச்சர் றிஷாட்!

wpengine

யாழில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு!!

Maash

இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

Editor