பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வங்கி கணக்கின் ஊடாக பல ரூபா நிதி மோசடி

வங்கிக் கணக்குகளில் இருந்து சட்டவிரோதமாக பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா – வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்கு வௌிநாடொன்றிலிருந்து 1,72,58,399 ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நிதி தூய்தாக்கல் சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வங்கிக் கணக்குகளில் சட்டவிரோதமாக ஊடுருவி பெற்றுக்கொள்ளப்படும் பணம், மோசடிக்காரர்களிடையே பகிரப்படுகின்றமையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பணத்தை பெற்றுக்கொள்ளும் பலர், நாட்டில் இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

மோசடியாக பெற்றுக்கொண்ட சுமார் 140 கோடி ரூபா பணம் நாட்டிலுள்ள சிலரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பணம் பெற்றுக்கொண்டவர்களில் ஒருவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.

இவ்வாறான பண மோசடியில் ஈடுபட்ட 36 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஆலய ஒலிபெருக்கிகளை யாருக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் பயன்படுத்துங்கள்.

Maash

தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல்வேறு சதி முயற்சிகள் அரங்கேற்றம்! அமைச்சர் றிசாத்.

wpengine

நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

wpengine