றிஷாட்டை கைது செய்தது எங்களுக்கு சந்தோஷம்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறது.

கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை பின்பற்றுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் நல்லிணக்கத்துடன் வாழும் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது.


இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் அவதானம் செலுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.


பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் கடந்த (20) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது. அரசியல் காரணிகளை விடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares