பிரதான செய்திகள்

ரமழான் பிறை தென்பட்டுள்ளது! அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

ஹிஜ்ரி 1437, புனித ரமழான் மாத தலைப் பிறை நாட்டின் பல பாகங்களில் இன்று மாலை தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்தது.

நாளை செவ்வாய்க்கிழமை நோன்பு பிடிக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
வேண்டியுள்ளது. புனித ரமழான் மாத தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும்
முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சமூக ஊடகங்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கு முன்னுரிமை! தீவிர பிரச்சாரம்

wpengine

ஈஸ்டர் தாக்குதலுக்கு பிள்ளையான், ஆசாத்மௌலானா தெரிவித்துள்ள விடயங்கள் சி.ஐ.டி. அதிகாரி தெரிவித்துள்ள விடயங்களுடன் ஒத்துப்போகின்றது .

Maash

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டம் ஜனாதிபதி தலைமையில்.!

Maash