யாழ்-அருட்தந்தையர்கள் மூவர் முதல் கட்டமாகத் தனிமை! மன்னார் ஆயர் இல்லம் முடக்கம்

கொரோனா அச்சத்தால் மன்னார் ஆயர் இல்லம் முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தங்கியிருந்த அருட்தந்தையர்களுக்கும் யாழ்ப்பாணம் அருட்தந்தையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட யாழ். அருட்தந்தையர்கள் மூவர் முதல் கட்டமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


மன்னாரில் ஆயர் இல்லத்தால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணியில் பணியாற்றும் வென்னப்புவ வாசிக்கு கொரோனாத் உறுதி செய்யப்பட்ட நிலையில் மன்னார் ஆயர் இல்லம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்த அருட்தந்தையர்களும் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் தாழ்வுப்பாடு கிராமத்தில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் மன்னார் ஆயர் இல்லம் மற்றும் யாழ்ப்பாணம் ஆயர் இல்லம் ஆகியவற்றின் அருட்தந்தையர்கள் பலர் கலந்துகொண்டுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


இவ்வாறு தாழ்வுப்பாடு கூட்டத்தில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் ஆயர் இல்ல அருட்தந்தையர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை, மன்னார் ஆயர் இல்லத்தினர் பி.சி.ஆர். பரிசோதனை பெறுபேற்றுக்காகக் காத்திருக்கின்றனர்.


இதனடிப்படையில் மன்னார் ஆயல் இல்ல அருட் தந்தையர்களுக்கு அல்லது அங்குள்ள பணியாளர்களுக்குக் கொரோனா இல்லை என உறுதிப்படுத்தும் பட்சத்தில் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தினர் தொடர்பில் எந்த அச்சமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares