பிரதான செய்திகள்

யாழில் புதிய ஹோட்டல் திறப்பு – ஜனாதிபதி பங்கேற்பு

யாழ். நகரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஹோட்டலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
அத்துடன் இதன்போது, யாழ். கரைநகர் பகுதியில் உள்ள சுற்றுலா மற்றும் ஹோட்டல் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்கள் ஐவருக்கு ஜனாதிபதி சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், அம் மாணவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, முஸ்தபா, விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கைக்காக இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 1583928836Untitled-1 (1)

யுத்தத்தின் பின்னர் யாழ். மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுலா அமைச்சின் அனுசரணையுடன், ஜேர்மன் நாட்டின் தனியார் நிறுவனம் யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக (மணிக்கூட்டு வீதி) குறித்த பிரமாண்டமான ஹோட்டலை நிர்மாணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

மழைக்கு ஒதுங்கிய ஆசிரியையிடம் பாலியல் நடவடிகை

wpengine

தரச் சான்றிதழ் வழங்காமையால் துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 20 இலட்சம் இந்திய முட்டைகள்!

Editor

முஸம்மிலின் பிணை மறுப்பு! மீண்டும் விளக்கமறியல்

wpengine