பிரதான செய்திகள்

மூன்று ஆண்டுகளில் பழங்கள் உற்பத்தி செய்யும் 15 ஆயிரம் கிராமங்கள்: துமிந்த திஸாநாயக்க

மூன்று ஆண்டுகளில் பழங்களை உற்பத்தி செய்யும் 15 ஆயிரம் கிராமங்களை ஏற்படுத்த உள்ளதாக விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு தலா ஆயிரம் பழக்கன்றுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிடடுள்ளார்.

காணிகளின் அளவுக்கு அமைய விவசாயிகளுக்கு பழக்கன்றுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் புதிய அரசாங்கம் பழங்களை உற்பத்தி செய்து அவற்றினை ஏற்றுமதி செய்யும் பொருளாதார திட்டங்களை முன்னெடுத்து செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வன்னி,யாழ் ஆகிய மாவட்டங்களில் தனித்துப்போட்டி

wpengine

லங்கா பிரீமியர் லீக் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஆரம்பமானது!

Editor

பாடகர் இராஜ் வீரரத்னவின் முகநூல் பதிவு! பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு

wpengine