பிரதான செய்திகள்

மூதூர் – மட்டக்களப்பு பிரதான வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்….

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல்மின்சார நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மதியம் 1.00 மணிலுயளவில் மூதூர் பெரிய பால சந்தியில் கூடிய மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மூதூர் பசுமைக் குழு அமைப்பின் ஏற்பாட்டில் மூதூர் – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சம்பூர் அனல் மின்சாரத்திட்டத்தை உடன் நிறுத்தி உதவுங்கள் என்று மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பாதாகையையும் ‘நோ கோல்’, சேவ் த பியுசர்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிவப்பு மற்றும் பச்சை நிறத்திலான அட்டைகளையும் ஏந்திநின்றதுடன்,

அனல் மின்னிலையம் தவிர்த்த வேறேனும் திட்டத்தினை அமுலாக்குவதில் கவனம் செலுத்துமாறு அரசிடம் கோரிக்கை விடுத்து நின்றனர்.

Related posts

இந்த ஆண்டில் இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு!

Editor

விஷ வாயுத் தாக்குதல்! பரிதாபமாக உயிரிழந்த இரட்டை குழந்தைகள்

wpengine

சைபர் குற்றங்கள் தொடர்பில் 1,187 முறைப்பாடுகள் பதிவு!

Editor