பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முழுமையாக முடங்கிய மன்னார்!

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

வீதிகள் வீடுகள் எங்கும் கருப்பு மற்றும் வெள்ளை நிற கொடிகள் பறக்கவிடப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இன்றைய தினம் ஆண்டகைக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதும் உள்ள பொது மக்கள், அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் என இலட்சக்கணக்கான மக்கள் இணைந்து இன்றையதினம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் உள்ள ஆண்டகையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாகங்களிலும் கருப்பு, வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில் மன்னார் மறை மாவட்டம் சோக மயமாகக் காணப்பட்டது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு, தனியார் போக்குவரத்துச் சேவைகளும் இடம் பெறவில்லை என தெரியவருகிறது.

Related posts

‘இந்தியாவில் தடுப்பில் உள்ள இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்’

Editor

மு.காவின் தராசுச் சின்னம் கள்ள மனைவியின் குழந்தைக்கு ஈடானது

wpengine

மன்னார் வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் அறிவிப்பு இன்று திடீரெண்டு விலகல் .

Maash