பிரதான செய்திகள்

முள்ளிக்குளம் பகுதியில் யானை தாக்குதல்! இடத்திலேயே பலி

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை பாலைக்குழி உள்ளக பிரதான வீதியில் நடைப்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சந்தியா கியோமர் குரூஸ் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று பாலைக்குழி பகுதியில் உள்ள அரிசி ஆலைக்குச் சென்று மாலை மலங்காட்டில் உள்ள தனது வீடு நோக்கி சென்றுள்ளார்.

இதன் போது மாங்காடு பாலைக்குழி உள்ளக பிரதான வீதியில் காட்டுப்பகுதியூடாக தனிமையாக வந்த காட்டு யானை ஒன்று அந்த வயோதிபரை கடுமையாக தாக்கியுள்ளது.

 

இந்த நிலையில் வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களையும் குறித்த யானை தாக்க முற்பட்டுள்ளது.

எனினும் தப்பிச் சென்ற அவர்கள், முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு தகவல் வழங்கியதையடுத்து கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரோஹிங்கிய முஸ்லிம்களை வடக்கு அனுப்புங்கள் மாகாண சபை சிவாஜிலிங்கம்

wpengine

ரங்காவின் இஸ்லாமிய போதனை! எதிரான முகநூல் பதிவுகள் (உள்ளே)

wpengine

அத்துமீறும் வடமாகாண அரசியல் இனவாதிகள்: சாடுகிறார் விமல்

wpengine