பிரதான செய்திகள்

முல்லைத்தீவு மாணவி தேசிய மட்டத்தில் முதலாமிடம்

தேசிய மட்ட தமிழ் தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு, குமுழமுனை மகா வித்தியாலய மாணவி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட தமிழ் தின போட்டியில் குமுழமுனை மகா வித்தியாலய மாணவியான பகீரதன் லாசன்ஜா பிரிவு 2 இல் பங்கு பற்றியுள்ளார்.

இந்த மாணவியின் சாதனை குமுழமுனை மகா வித்தியாலயத்திற்கும், முல்லை வலயத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்திருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கல்வியில் மென்மேலும் சிறக்க பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்பதோடு இவருக்கு பயிற்றுவித்த ச.சந்திரசேகரம் ,ந.பாலநாதன் ஆசிரியர்களையும் பாடசாலை சமூகம் வாழ்த்தியுள்ளனர்.

Related posts

கலாநிதி பட்டம் பெற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine

மன்னார் ,தாழ்வுபாட்டு கிராமத்தில் கைக்குண்டு மீட்பு

wpengine

வடக்கில் அரசியல் நோக்கத்துடன் பௌத்தமயமாக்கல்

wpengine