பிரதான செய்திகள்

முன்னாள் MP ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிடியாணை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் ஆஜராகாமையை அடுத்தே கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருவரை திருமணம் செய்துக்கொள்வதாக உறுதியளித்து 10 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு, கண்டி விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கு, புதன்கிழமை (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றத்தில் ஆஜராகாமையை அடுத்து இவ்வாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ள கண்டி மேலதிக நீதவான் மொஹமட் ராபி, அந்த வழக்கு விசாரணை செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

 
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரினால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

Related posts

வெப்ப வெட்டுவான் பிரதேசம் கொம்பர் சேனை பண்டாரக் கட்டு பகுதி விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்றிந்தார் ஷிப்லி

wpengine

Dematagoda Kahiriya Girl School 4 floors building opend ZAM REFAI Haj

wpengine

வவுனியாவில் 10 வருடங்களாக வாடகை கட்டடங்களில் மூன்று சங்கங்கள்! பலர் விசனம்

wpengine