பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவுக்கு 66 இலட்சம் ரூபாவை செலுத்த நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பில் உள்ள தனியார் சர்வதேச பாடசாலை ஒன்றில் கடமையாற்றிவரும்  46 ஆரியர்களுக்கு உரிய ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு செலுத்தவேண்டடிய 66 இலட்சம் ரூபாவை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தப் பாடசாலையின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா உட்பட பாடசாலையின் நிர்வாகத்தைச் சேர்ந்த 4 பேருக்குமே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உரிய நிதியங்களுக்கான நிதியை இன்று வியாழக்கிழமை (20)  செலுத்துமாறும் இல்லாவிடில் 6 சிறைத்தண்டனை விதித்து  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான்  அன்னவர் சதாத் உத்தரவிட்டார்.

 சர்வதேச பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 வரையில் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 66 இலட்சத்து 54 ஆயிரத்து 779 ரூபாய் 40 சதம் செலுத்தவேண்டும். 

பாடசாலையின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா மற்றும் பாடசாலை நிர்வாகத்தைச் சேர்ந்த அவரது மனைவி மற்றும் உறவினர் உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு தொழில் திணைக்களம் , மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்தனர்.

Related posts

ஸ்ரீநகர் மக்களவை இடைத்தேர்தலில் பரூக் அப்துல்லா வெற்றி

wpengine

நல்லிணக்கப் பொறிமுறை! மன்னார் முஸ்லிம்களின் பிரச்சினைகள்

wpengine

31வது தேசிய விளையாட்டு முதலிடம் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த றிஷாட்

wpengine