முதன் முறையாக கறுப்பின அடிமைப் பெண்ணின் உருவம்!

அமெரிக்க வரலாற்றில் முதற் தடவையாக கறுப்பின அடிமைப் பெண்ணின் உருவம் 20 ரூபா டொலர் நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளது. 

1820 ஆம் ஆண்டில் பிறந்த கறுப்பின அடிமைப் பெண்ணான ஹெரியட் டும்மன் என்பவரின் உருவமே அமெரிக்க டொலர் நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளது.

அடிமைகள் உரிமையாளரான முன்னாள் ஜனாதிபதி என்ட்ஷ ஜெக்சனின் உருவம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஹெரியட் டும்மனின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.

எஜமானர்களின் பல்வேறு கொடுமைகளுக்காலான அடிமைகள் தப்பிச் செல்வதற்கு உதவியவராக ஹெரியட் தொடர்பில் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுரங்க ரயில் பாதையினூடாக அடிமைகள் தப்பிச் செல்வதற்கு அவர் செய்த உதவிகள் இன்றும் பேசப்படும் ஒரு விடயமாகும். அடிமைகளை மீட்க உதவியது மட்டுமன்றி நாட்டின் ஜனநாயத்தை நிலைநாட்ட பங்களிப்பு வழங்கியமையையும் இட்டு அவரை கௌரவப்படுத்தும் வகையிலேயே டொலரில் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் தப்பியோடிய அடிமைகள் பன்றிகளுடனும் கோழிகளுடனும் படகில் ஏற்றி அனுப்பிய காட்சியை பின்னாளில்  நினைவு கூர்ந்த ஹெரியட் இனி அவ்வாறான காட்சியை காணக்கிடைக்க கூடாது என்று தான் பிரார்த்திப்பதாக கூறியிருந்தார்.

மேலும், அமெரிக்க சிவில் யுத்தத்தின்போதும் ஹெரியட் ஆற்றிய பணிகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares