பிரதான செய்திகள்

மீண்டும் பிபிலை வலய கல்வி பணிப்பாளராகிறார் சரீனா பேகம்

பிபிலை வலயக் கல்விப் பணிப்­பா­ள­ராக சரீனா பேகத்தை மீண்டும் நிய­மிப்­ப­தற்கு ஊவா மாகாண கல்வித் திணைக்­களம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.
கடந்த 10ஆம் திகதி  முன்­தினம் உயர் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போதே ஊவா மாகாண கல்வித் திணைக்­களம் இந்த இணக்­கத்தை வெளி­யிட்­ட­தாக சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தெரி­வித்தார்.

பிபிலை கல்விப் பணிப்­பா­ள­ராக 2015ஆம் ஆண்டு நிய­மிக்­கப்­பட்ட சரீனா பேகத்தின் நிய­ம­னத்தை இரத்துச் செய்து பிறி­தொ­ரு­வரை ஊவா கல்வித் திணைக்­களம் நிய­மித்­தி­ருந்­தது.

தகுதி அடிப்­ப­டையில் தனக்கு வழங்­கிய நிய­ம­னத்தை தான் ஒரு முஸ்லிம் என்­பதால் இரத்துச் செய்­த­தாக சரீனா பேகம் உயர் நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செதி­ருந்தார்.

உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ரான பரி­யா­சாந்த டெப் நஸில் பெரேரா மற்றும் ஜே. ஆப்ரூ ஆகியோர் முன்­னி­லையில் இந்த வழக்கு நேற்று முன்­தினம் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போதே இந்த வழக்­கினை சம­ர­ச­மாகத் தீர்த்­துக்­கொள்­வ­தற்கு ஊவா மாகாண கல்வித் திணைக்­களம் இணக்கம் தெரி­வித்­தது.

இத­னை­ய­டுத்து இரு தரப்­பி­னரும் வழக்­கினை சம­ர­ச­மாக தீர்த்துக் கொள்­வ­தற்கு சம்­ம­தித்­தனர்.

இதற்­க­மைய மீண்டும் பிபிலை வலய கல்விப் பணிப்­பா­ள­ராக சரீனா பேகம் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் இலங்­கையின் முத­லா­வது முஸ்லிம் பெண் வலயக் கல்விப் பணிப்­பாளர் என்ற பெரு­மை­யையும் இவர் பெற்றுக் கொள்வார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ் வழக்கில் சரீனா பேகம் சார்பில் ஆர்.ஆர்.டி. நிறு­வன சிரேஷ் உறுப்­பினர் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். இந்த வழக்கில் தமக்குக் கிடைத்த வெற்­றி­யா­னது இலங்கை முஸ்­லிம்கள் சக­ல­ருக்கும் படிப்­பி­னைக்­கு­ரி­யது எனவும் முஸ்­லிம்கள் தமது உரி­மை­களை சட்­டத்தின் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்த சம்பவம் நல்லதோர் எடுத்துக்காட்டு எனவும் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

முள்ளிக்குளம் மக்களின் பிரச்சினை பற்றி ஆராய்ந்த புதிய பிரதேச செயலாளர் ஏன்? மறிச்சுக்கட்டி மக்களை பார்வையீட வில்லை?

wpengine

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது காலத்தின் கட்டாயம் – ஹிஸ்புல்லாஹ்

wpengine

தமிழரை கிழக்கில் முதலமைச்சராக வேண்டும் வியாளேந்திரன் (பா.உ)

wpengine