மீண்டும் தனது பாதுகாவலரை விஜயகாந்த் தாக்கியதால் பரபரப்பு! (வீடியோ)

மீண்டும் தனது பாதுகாவலரை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு, ராதாபுரம் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ். சிவனணைந்தபெருமாள், நான்குனேரி தே.மு.தி.க. வேட்பாளர் கே.ஜெயபாலன், பாளையங்கோட்டை ம.தி.மு.க. வேட்பாளர் நிஜாம், அம்பாசமுத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கற்பகவல்லி, திருநெல்வேலி தே.மு.தி.க. வேட்பாளர் மாடசாமி ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.

அப்போது, ”இந்த தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல். தர்மத்தின் பக்கம் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, மக்கள் ஆதரவுடன் உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக சிலர் கருத்துக்கணிப்பு வெளியிட்டு வருகிறார்கள். அது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விஷச் செடிகள். புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என ஜெயலலிதா பிரசாரம் செய்தார். ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதை ஏன் அவர் விரும்பவில்லை. அண்ணா நகர் ரமேஷ் மரணத்திலும், 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாதிக் பாட்ஷா மரணத்திலும் மர்மம் உள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares