தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

மாணவியின் பேஸ்புக் காதல்! பழிவாங்கிய நபர்

பேஸ்புக்கில் கிடைத்த நட்பு காரணமாக பாடசாலை மாணவி பெரும் அவமானத்திற்கு முகங்கொடுத்தள்ளார்.

நீர்கொழும்பு, தியஹொரடுவ பகுதியை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார்.
இம்முறை உயர்தரம் பரீட்சை எழுதவுள்ள குறித்த மாணவி அண்மையில் தனக்கு தெரியாத நபர் ஒருவர் அனுப்பிய நட்பு விண்ணப்பத்தை பேஸ்புக்கில் ஏற்றுள்ளார்.

இதனால் ஏற்பட்ட நட்புறவு காரணமாக நல்லமுறையில் உரையாடியுள்ளார்.
எனினும் குறித்த நபர் குறித்த மாணவி வாழும் பகுதியை சேர்ந்தவர் எனவும், அவர் ஏற்கனவே திருமணமாவர் என்பதையும் மாணவி அறிந்து கொண்டுள்ளார்.

இதன்காரணமாக குறித்த நபருடன் உரையாடுவதை நிறுத்தியுள்ளதுடன், பேஸ்புக்களில் குறித்த நபரை தடை செய்துள்ளார்.

மாணவியின் செயற்பாட்டினால் ஆத்திரமடைந்த குறித்த நபர், அவரை பழிவாங்கும் நோக்கில் முறையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த மாணவியின் பேஸ்புக்கில் இருந்த புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக மாற்றி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

மாணவியின் புகைப்படங்கள் ஆபாசமாக இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் பிறிதொரு நண்பி மூலம் அறிந்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவரின் பெற்றோருக்கு தெரியப்படுத்திய மாணவி, வெலிபென்ன பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய அதே பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய மீனவரான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த முன்னால் ஜனாதிபதி

wpengine

சிறுபான்மை தலைவர் மீது குறிவைக்கப்படுகிறது அதிலும் குறிப்பாக முன்னால் அமைச்சரை

wpengine

வட, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் – உதுமாலெவ்வை

wpengine