பிரதான செய்திகள்

மஹிந்தவின் பொதுஜன பெரமுண இரண்டாவது ஆண்டு நிறைவு

பொதுஜன பெரமுணவின் இரண்டாம் வருட நிறைவை முன்னிட்டு நவம்பர் முதலாம் திகதி விசேட வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பத்தரமுல்லை, நெளும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுண கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,
பொதுஜன பெரமுண கட்சியின் இரண்டாம் வருட நிறைவு வைபவங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளன.

எமது கட்சியின் பலத்தை குறைவாக மதிப்பிட்டுள்ளவர்களுக்கு அன்றைய தினம் நாம் கட்சியின் பலத்தை தௌிவாக உணர்த்தவுள்ளோம்.

சுதந்திரக் கட்சி தேவையென்றால் எங்களுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட முன்வரவேண்டும்.

இன்னொரு தேர்தலின் பின் சுதந்திரக் கட்சி காணாமல்
போய்விடும் என்றும் ரோஹித அபேகுணவர்த்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Related posts

“புலிப் பயங்கரவாதத்தை அழித்த மாபெரும் தலைவனே எங்களுடைய தலைவர் மஹிந்த

wpengine

மங்கள சமரவீர வெளியிட்ட புதிய 5000ரூபா

wpengine

முஸ்லிம்களுக்கெதிராக இனவாத தாக்குதல்! இரண்டு அரசாங்கங்களும் தவறியிருக்கின்றன

wpengine