பிரதான செய்திகள்

மரண அறிவித்தல்

மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் ஊடக இணைப்பாளர்களில் ஒருவர் டீ.எம். சவாகிர் அவர்களின் தந்தை ஓய்வுபெற்ற அதிபர் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஐ. தைப்தீன் அவர்கள் இன்று மாலை கண்டி வைத்தியசாலையில் காலமானார்.

இவர் ஆரம்பகாலத்தில் மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டதோடு 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டிருந்தார்.

வடமத்திய மாகாணத்தின் தமிழ் மொழிமூல முதல் தர பட்டதாரியான இவர், மாத்தளை சாஹிரா தேசிய பாடசாலை, உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை, அக்குரணை அஸ்ஹர் தேசிய பாடசாலை, அ/உந்துருவ கட்டுக்  கொளியாவை முஸ்லிம் வித்தியாலயம், அ/கணேஸ்வல்பொல மு.ம.வி, ஆகிய பாடசாலைகளின் முன்னாள் அதிபராவார்.

மேலும் இவர் கெக்கிராவ கஹட்டஸ்திலிய தொலைக்கல்வி போதனா ஆசிரியராகவும், வடமத்திய மாகான உயர்தர புவியியல் ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.

அன்னாரது நல்லடக்கம் நாளை காலை பத்து மணிக்கு மாத்தளை ரஹ்மியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்கள்

மகன்,

T.M. சவாகிர்

மாத்தளை 

0772975602          

 

Related posts

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பை காட்டிய! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

wpengine

அதிகாலை ஆனமடுவ மதீனா ஹோட்டல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

wpengine

அர்ச்சுனாவுக்கு எதிரான மனு : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு…

Maash